ஆசிரியையைக் கோடாரியால் தாக்கிய மாணவன் கைது! பள்ளியில் பரபரப்பு!
- THINAGAREN SANGGAREN
- 21 Oct, 2026
அக்தோபர் 21,
இடைநிலைப்பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்குள் கோடாரியுடன் ஆவேசமாக நுழைந்து வகுப்பாசிரியரைக் கோடாரியால் தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சரவாக் மாநிலக் காவல்துறை ஆணையர் Saifullizan Ishak தெரிவித்தார். இன்று காலை 7.49 மணிக்கு சரவாக் கூச்சிங்கில் உள்ள TUNKU PUTRA – HELP சர்வதேச இடைநிலைப்பள்ளியில் இச்சம்வம் நிகழ்ந்துள்ளது.

அந்த மாணவன் ஆவேசமாக அலறியபடி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்க முயற்சித்த போது மாணவர்கள் அலறியபடி வகுப்பறையிலிருந்து வெளியேறும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது. தொடர்ந்து ஆசிரியரை நோக்கி ஓடிய அம்மாணவன் ஆசிரியரைக் கோடாரியால் தாக்கியதும், நிலமையைச் சுதாரித்த வகுப்பறையில் இருந்த மற்றொரு மாணவன் மடக்கி பிடித்தான். இச்சம்பவம் தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவி வரும் நிலையில் மேலும் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளது.

கோடாரியுடன் அம்மாணவன் தலையில் கைத்தொலைப்பேசியின் கேமிராவைப் பொறுத்தியபடி அனைத்தையும் காணொலியாகப் பதிவு செய்து முகநூலில் நேரலையாகப் பகிர்ந்தும் உள்ளான். பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வகுப்பிலிருந்த அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் Saifullizan Ishak தெரிவித்தார்.

தாக்குதலை நடத்திய மாணவனை ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டுப்படுத்தி பள்ளியின் வகுப்பறையில் பூட்டி வைத்ததாகவும், காவல்துறை பள்ளிக்கு விரைந்து அம்மாணவனைக் கைது செய்திருப்பதாகவும் Saifullizan Ishak தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலிகளைச் சமூகவலைத்தலங்களில் மேலும் பகிர வேண்டாம் என்றும் கைது செய்யப்பட்ட மாணவனின் அடையாளத்தைப் பகிர வேண்டாம் என்றும் சரவாக் மாநிலக் காவல்துறை ஆணையர் Saifullizan Ishak கேட்டுக்கொண்டார்.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *