இன்னும் 67 ரன்கள்... உலக சாதனையை நெருங்கிய ஸ்மிருதி மந்தனா!
- Surendran Sumdraraj
- 11 Sep, 2026
துபாய், செப். 11 –
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் 10-ஆவது பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 10-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அல்லது இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் 4,758 ரன்களுடன் வைத்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா தற்போது 175 போட்டிகளில் 4,692 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். உலக சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 67 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இறுதிப்போட்டியில் 67 ரன்கள் எடுத்தால், சூசி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை மந்தனா படைப்பார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



