பக்காத்தானுக்கு இந்தியர்களின் ஆதரவு குறைகிறதா?!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 25: ஒரு காலத்தில் பக்காத்தான் ஹராப்பனுக்கு நம்பகமான வாக்கு வங்கியாக இருந்த இந்திய சமூகம், தற்போது கூட்டணியில் இந்திய சமூகத்திற்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளரும்,

நுஸாந்தர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார்.

 டிஏபி மற்றும் பிகேஆர் இரண்டும் இந்திய சமூகத்தை புறக்கணித்துவிட்டதாக மக்கள் நினைப்பதாக அவர் கூறினார்.

டிஏபி பல ஆண்டுகளாக இந்திய ஆதரவை சாதாரணமாக எடுத்துக் கொண்டது. அதனால், வாக்காளர்கள் பிகேஆருக்குச் சென்றனர்.

ஆனால், இப்போது அவர்கள் பிகேஆரில் தங்களைச் சிறுபான்மையினர் என்று உணர்கிறார்கள்.  மேலும் அவர்கள் டிஏபியில் இருந்தபோது இருந்ததை விட இப்போது அவர்களின் அதிருப்தி அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது என்று இணையதள ஊடகமான FMTக்கு வழங்கிய செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேரு இடைத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத் தொகுதியை வென்ற போதிலும், பக்காத்தான் ஹராப்பான் இந்திய வாக்குகளில் கணிசமான பகுதியை இழந்தபோது அடைந்த ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது என்று அஸ்மி சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *