சுபாங் நாடாளுமன்றத் தொகுதி காலியானது: தேர்தல் ஆணையத்துக்குத் தகவல்
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 11-
சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த நாடாளுமன்றத் தொகுதி காலியானது குறித்து மலேசியத் தேர்தல் ஆணையத்துக்கு (எஸ்பிஆர்) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் தன் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
வோங் சென் நேற்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதுதொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“சுபாங் தொகுதியின் மாண்புமிகு உறுப்பினர் வோங் சென், நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்,” என்று அவர் கூறினார்.
மேலும், கூட்டாட்சி அரசியலமைப்பின் 54(1) பிரிவுக்கு இணங்க, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியானது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிவித்துள்ளதாக ஜொஹாரி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



