எஸ்பிஎம் 2025 – மலாய் மொழி பாடம் உட்பட 29 பாடங்களில் அடைவுநிலை குறைவு
- Surendran Sumdraraj
- 31 Mar, 2026
புத்ராஜெயா, மார்ச் 31-
எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வில், மொத்தம் 95 பாடங்களில் 29 பாடங்கள் Gred Purata Mata Pelajaran (GPMP) அடிப்படையில் அடைவு நிலை குறைந்துள்ளதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அஹ்மத் தெரிவித்ததார்.
63 பாடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. மேலும், மூன்று பாடங்களில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
ஏழு முக்கிய பாடங்களில், மூன்று பாடங்கள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், நான்கு பாடங்களில் செயல்திறன் சரிவு ஏற்பட்டுள்ளது.
அவற்றில், Pendidikan Islam பாடம் அதிகளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இந்தப் பாடத்தின் GPMP மதிப்பெண் 2024 ஆம் ஆண்டில் 3.99 ஆக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் 3.20 ஆக குறைந்துள்ளது. இதனால் 0.79 புள்ளிகள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், Bahasa Melayu உட்பட சில முக்கிய பாடங்களில் ஏற்பட்டுள்ள செயல்திறன் சரிவு குறித்து கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



