SPM தேர்வை முடித்த மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் அட்டூழுயம்! 23 விபத்துகள்!
- Thinagaren Sanggaren
- 07 Dec, 2025
டிசம்பர் 7,
நேற்றுடன் எஸ் பி எம் தேர்வுகள் நிறைவடைந்ததை அடுத்து மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் செல்லும்படியானக் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகிறது. SPM மாணவர்கள் சாலைகளில் ஆபத்தான முறைகளில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதுடன் சிலாங்கூர் கோலாலம்பூர் பகுதிகளில் மொத்தம் 23 மோட்டார் சைக்கிள் விபத்துகள் நிகழ்ந்திருப்பதாகவும் இரு SPM மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. SPM மாணவர் ஒருவர், சாலையின் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி, வாகனத்தை நேருக்கு நேர் மோதும்படியானக் காணொலியும் சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது SPM தேர்வை முடித்த மாணவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 20 வயது இளைஞர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
SPM முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளி சீருடைகளில் குண்டர் கும்பலுடன் தொடர்புடைய எண்களை வரைந்து புகைப்படங்களைச் சமூகவலைத்தலங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். பள்ளிச் சீருடைகளில் வன்மம் மிக்க வார்த்தைகளும் ஓவியங்களும் இடம்பெறும்படியானப் புகைப்படங்கள் சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது. காஜாங்கில் உள்ள Jalan Bukit சாலையில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது வாகனமோட்டியை மாணவர்கள் தாக்க முற்பட்ட போது பொதுமக்கள் சூழ்ந்து மாணவர்களைத் தடுத்ததாகவும் மோட்டார் சைக்கிளை எதிர்திசையில் செலுத்திய மாணவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



