RM 230 மில்லியன் நிதி மாயம்! SPRM வங்கிகளிடம் விசாரணை!
- THINAGAREN SANGGAREN
- 24 Apr, 2026
ஏப்ரல் 24,
அரசு நிதியில் மோசடி நடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை நடத்தி வருவதாக அதன் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். கடந்த மாதம் 230 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானப் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக நிறுவனங்கள் வணிகங்கள் தொடர்பானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக Tan Sri Azam Baki தெரிவித்தார்.
தற்போது 230 மில்லியன் ரிங்கிட் நிதியின் பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வங்கிகளின் ஆவணங்கள் கிடைக்க பெற்றதும் அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki உறுதியளித்தார். அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து Tan Sri Azam Baki தலைமையிலான புலனாய்வுக் குழு சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



