அரசு நிதி தவறான பயன்பாடு: 3 விசாரணைக் கோப்புகள் திறப்பு – SPRM
- Tamil Malar (Reporter)
- 22 Jan, 2026
கோத்தா பாரு, ஜன. 22-
அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் மூன்று விசாரணைக் கோப்புகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) திறந்துள்ளதாக அதன் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
அரசின் நிதியுதவி, ஒதுக்கீடுகளை பெற்ற சில அரச சாரா அமைப்புகள் (NGO) அந்த நிதிகளை தவறாக பயன்படுத்தியுள்ளன என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேபோன்று, சில கூட்டுறவு சங்கங்களும் (koperasi) அரசு நிதி தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், அரசின் கடனுதவி அல்லது நிதியுதவி பெற்ற சில நிறுவனங்கள் மீதும், நிதி சுரண்டல், தவறான செலவினம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
இதனுடன், அரசுக் கொள்முதல் (perolehan) தொடர்பான விவகாரங்களிலும் பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. சொத்துக்கள் வாங்குதல், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய மொத்தம் 26 விசாரணைக் கோப்புகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



