துன் டைம் குடும்பச் சொத்துகளைப் பறிமுதல் செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் முயற்சி

top-news

கோலாலம்பூர், டிச. 10-

முன்னாள் நிதியமைச்சரும் காலஞ்சென்ற டான் ஸ்ரீ டைம் ஜைனுடின் குடும்பத்துக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) செஷன்ஸ் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது.

இருப்பினும், இன்று டைம் குடும்பத்தினர் தற்காலிக “கேக் ஆர்டர்” (gag order) பெற்றுள்ளனர். இதன்படி, வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டவர்களின் அடையாளமும், பறிமுதல் கோரப்படும் சொத்துகளின் விவரங்களும் பொதுவெளியில் வெளியிடப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவுக்கு அரசு தரப்பு துணைப் பொது வழக்கறிஞர் எம். எஸ்தர் ஜெசிந்தா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பிரதிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் நிஜாமுடின் அப்துல் ஹமீட் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது: “எனது கட்சிக்காரர்களைப் பாதிக்கும் வகையில் உணர்வுபூர்வமான தகவல்கள் வெளியாவதைத் தடுக்க இந்தத் தடை உத்தரவு கோரப்பட்டது. அதனை அரசு தரப்பும் ஏற்றுக்கொண்டது.”


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *