முகைதீனின் RM225 மில்லியன் ஊழல் வழக்கின் விசாரணை தொடரும்! நீதிமன்றம் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

மே 24,

முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin மீதான ஊழல் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும் நீதிமன்ற விசாரணைக்கு Tan Sri Muhyiddin Yassin ஒத்துழைக்க வேண்டும் என்றும் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான ஊழல் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்த Tan Sri Muhyiddin Yassin-னின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நிராகரித்ததுடன், நாளை தொடங்கி அடுத்த 3 நாள்களுக்கு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி Tan Sri Muhyiddin Yassinக்கு உயர்நீதிமன்ற நீதிபதி  Noor Ruwena Md. Nurdin உத்தரவிட்டார். 

முகைதீன் பிரதமராக இருந்த 2020 முதல் 2021 ஆம் காலக்கட்டத்தில் JANA WIBAWA திட்டத்தைச் செயல்படுத்த  Bukhary Equity Sdn Bhd, Nepturis Sdn Bhd Mamfor Sdn Bhd ஆகிய 3 பெருநிறுவனங்களிடமிருந்து RM225 மில்லியன் நிதியைத் தனது பெர்சத்து கட்சியின் வங்கிக் கணக்கின் மூலமாகப் பெற்றதாகக் தான் ஸ்ரீ முகைதீன் மீது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் தொடர் விசாரணையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முகைதீன் விடுத்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து நாளை முதல் முகைதீனுக்கு எதிரான விசாரணையை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *