Shamsul ஊழலில் அன்வாரையும் அசாம் பாக்கியையும் விசாரிக்க வேண்டும்! பி.கே.ஆர் MP Hassan Karim
- Thinagaren Sanggaren
- 27 Nov, 2025
நவம்பர் 27,
பிரதமர் அன்வாரின் தலைமை அரசியல் செயலாளர் Datuk Seri Shamsul Iskandarக்கு எதிராக எழும்பியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டின் பின்னனியில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இருப்பது உண்மை என்றால் அசாம் பாக்கியும் பிரதமர் அன்வாரும் விசாரிக்கப்பட வேண்டும் என பாசீர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினரும் பி.கே.ஆரின் மூத்தத் தலைவருமான Hassan Abdul Karim வலியுறுத்தினார். பிரதமரின் தலைமை அரசியல் செயலாளர் Datuk Seri Shamsul Iskandar சபா கனிம வள ஊழல் வழக்கிலிருந்து Albert Tei எனும் தொழிலதிபரை விடுவிக்கும்படி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநரான அசாம் பாக்கியை வலியுறுத்தியாக ஒரு பெண் காணொலியை வெளியிட்டதும் Datuk Seri Shamsul Iskandar பிரதமரின் தலைமை அரசியல் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த காணொலியின் உண்மை தன்மை விசாரிக்கப்பட வேண்டும். பிரதமரின் அரசியல் செயலாளர் பிரதமருக்குத் தெரியாமல் தலைமை இயக்குநரிடம் கோரிக்கை வைப்பது நம்பகமானது அல்ல என பாசீர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Abdul Karim தெரிவித்தார். சபாவின் கனிமவள ஊழல் விசாரணையிலிருந்து Albert Tei எனும் தொழிலதிபரை விடுவிக்கும்படி அன்வார் வலியுறுத்தியதால் அன்வாரின் அரசியல் செயலாளர் Datuk Seri Shamsul Iskandar SPRM தலைமை இயக்குநரிடம் Albert Tei எனும் தொழிலதிபரை விசாரணையிலிருந்து விடுவிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார் என்றால் இந்த வழக்கில் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki ஆகிய இருவருமே விசாரிக்க வேண்டியவர்கள் என்பதை பாசீர் குடாங் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Abdul Karim சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



