1.3 மில்லியன் நிதி முறைகேடு –மத போதகர் மீண்டும் ரிமாண்ட்

top-news

அலோர் ஸ்டார், பிப். 6-

மாநிலத்தில் உள்ள கல்வி மற்றும் தாவா மையமாக செயல்படும் ஒரு நிறுவனத்தில் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் 1.3 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பாக, ஒரு மத போதகர்  மற்றும் அந்த நிறுவனத்தின் நிதி மற்றும் கணக்கியல் துறைத் தலைவர் ஆகியோர் மீண்டும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் மூன்று நாட்கள் ரிமாண்ட் உத்தரவு வழங்கப்பட்டு, அது இந்த ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருக்கும். SPRM தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அலோர் ஸ்டார் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மஜிஸ்திரேட் நூர் அமலினா அப்துல் ரஹ்மான் இந்த உத்தரவை வழங்கினார்.

வட்டார தகவலின்படி, 30 வயதுகளில் உள்ள ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவரும் நேற்று மாலை 6 மணியளவில் சுங்கை பட்டாணி SPRM அலுவலகத்தில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன், இருவரும் சுங்கை பெத்தானி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் SPRM மனுவின் பேரில் ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அதே நாளில் மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *