அசாம் பாக்கிக்கு மீண்டும் பதவி! என்ன காரணம்? - ஹம்ஸா கேள்வி
- Shan Siva
- 03 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 3: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு
ஆணையத்தின் முன்னாள் தலைவர் அஸாம் பாக்கியை தேசிய நிதிக்குற்றத் தடுப்பு மையமான NFCC ஆலோசகராக நியமித்ததற்கான
காரணத்தை அரசாங்கம் விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுதீன்
வலியுறுத்தியுள்ளார்.
'கார்ப்பரேட் மாஃபியா' என்று அழைக்கப்படும் ஒரு குழு
மற்றும் அவரது பங்குரிமை தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட பல சர்ச்சைகளுடன் அஸாம்
தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது நியமனம் கேள்விக்குரியது என்று ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
விசாரணையில் உள்ள பிரச்சினைகளை அவரே எதிர்கொண்டுள்ள நிலையில், அவரை NFCC-யின் ஆலோசகராக நியமிப்பதற்கான நியாயம் என்ன? என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வினவினார்.
மேலும், புத்ராஜெயா இதற்குப்
பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



