திதிவாங்சா மைதானம் – செப்பாக் தக்ராவின் அதிகாரப்பூர்வ மையம்
- Surendran Sumdraraj
- 23 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 23-
கடந்த ஆண்டில் அனைத்துலக அரங்கில் தேசிய செப்பாக் தக்ராவ் அணியின் சிறப்பான சாதனையைத் தொடர்ந்து, ஸ்டேடியம் திதிவாங்சா தற்போது ‘Home of Sepak Takraw’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இந்த அறிவிப்பை வெளியிட்டார். Jabatan Wilayah Persekutuan (JWP) மற்றும் Dewan Bandaraya Kuala Lumpur (DBKL) இணக்கத்துடன், தித்திவாங்சா மைதானம் தேசிய செப்பாக் தக்ராவ் விளையாட்டின் அதிகாரப்பூர்வ மைதானமாக மாற்றப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதல் கட்ட மேம்பாட்டிற்காக 80,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மைதானத்தின் அடையாளத்தை வலுப்படுத்தும் பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
‘Home of Sepak Takraw’ என்ற கருப்பொருளில் சுவரோவியங்கள் வரையுதல், புதிய LED புள்ளிப்பலகை பொருத்துதல், VIP அறை, ஊடக அறை, கிடங்கு, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. மேலும், உடை மாற்றும் அறைகள் மற்றும் கூட்டறைகளும் புதுப்பிக்கப்படுகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



