சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – 800 பேருக்கு உயர்வூதிய வேலைவாய்ப்பு

top-news
FREE WEBSITE AD

சென்னை: உலகப் புகழ்பெற்ற காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், தனது உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) சென்னையில் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஸ்டார்பக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த மையத்தின் மூலம் சுமார் 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர்வூதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் அமைக்கும் முதல் உலகளாவிய திறன் மையம் இதுவாகும். சென்னையில் அமையவுள்ள இந்த மையம், டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்திய சில்லறை வணிகத்திலிருந்து தனித்ததாகச் செயல்படும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *