மலேசிய நிறுவனங்களுக்கும், காட்டுத் தீ சம்பவத்திற்கும் தொடர்பா?! நாடாளுமன்றத்தில் விளக்கம்

top-news

கோலாலம்பூர், அக் 28: இந்தோனேசியாவில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ விபத்துகளுக்குப் பின்னால் மலேசியத் தொடர்புடைய தோட்ட நிறுவனங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இயற்கை வளங்கள் அமைச்சகமும் தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சகமும் இணைந்து ஆய்வு நடத்தியதாக அவர் கூறினார்.

தீ விபத்துகளுக்குப் பொறுப்பான நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதைக் கட்டுப்படுத்தும் முன்மொழிவு குறித்தும் சட்ட அடிப்படை, ஆதாரத் தரநிலைகள் மற்றும் நிதித் துறையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைப்பான வால்ஹி, கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மலேசியத் தொடர்புடைய வர்த்தகக் குழுக்களுடன் இணைந்த 21 நிறுவனங்களுக்குக் காட்டுத் தீயில் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது.

எல்லை தாண்டிப் பரவும் புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அதற்குக் காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தனிச் சட்டம் கொண்டுவருவது குறித்து அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இருப்பினும், வெளிநாடுகளில் ஆதாரங்களைச் சேகரிப்பது, நிறுவனங்களின் பொறுப்பை நிரூபிப்பது, சட்ட அதிகார வரம்பு மற்றும் பிற நாடுகளின் இறையாண்மை தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்