இஸ்தானா செர்டிங்கில் பதவியேற்பு விழாவா? பக்குவமாக இருங்கள்! முகமட் ஹசான் விளக்கம்
- Shan Siva
- 01 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 1: இன்றைய தேர்தலில் வெற்றி பெற்றால், ஜெம்போலில் உள்ள இஸ்தானா செர்டிங்கில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கான பதவியேற்பு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாரிசான் நேஷனல் மறுத்துள்ளது.
நெகிரி செம்பிலான் பாரிசான் நேஷனல் தலைவர் முகமட் ஹசான், அத்தகைய திட்டம் எதுவும் தனக்குத் தெரியாது என்றும், இந்தக் குற்றச்சாட்டுகளை பாரிசான் நேஷனலின் எதிரிகளால் திட்டமிடப்பட்ட அவதூறு மற்றும் உளவியல் போர் என்றும் விவரித்தார்.
தோக் மாட் என்று பரவலாக அறியப்படும் முகமட், இந்தக் குற்றச்சாட்டை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது அவதூறைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தத் தேர்தலில், நாம் பொய்களைப் பரப்புவதற்குப் பதிலாக, நம்மால் என்ன செய்ய முடியும், என்ன செய்யப்பட வேண்டும் என்பதைப் பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பக்குவமாக இருங்கள். மக்கள் இனி அவதூறுகளை நம்புவதில்லை, என ரந்தாவிலுள்ள SJK(C) சுங் ஹுவாவில் தனது வாக்கைச் செலுத்திய பிறகு அவர் தெரிவித்துள்ளா.
நெகிரி செம்பிலான் தேர்தலில் BN 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் பெரிகாத்தான் நேஷனலுடன் அது ஒரு தேர்தல் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



