ரிஷப ராசிக்கு புத்தாண்டில் இப்படி ஒரு அதிர்ஷ்டமா!
- Muthu Kumar
- 23 Dec, 2025
கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஆன்மீக பக்கத்தில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் அருமையாக இருப்பார். 11 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் அற்புதமான யோகம் உண்டாகும். பெற்றோர்களின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கம்
என்பதால் மன அழுத்தம் ஏற்படும்.
ஜூன் மாதத்துக்குள் கடன்களை அடைப்பீர்கள். எதிரிகள் விஷயம் சரியாகும். ஜூன் மாதம் முதல் லாபம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். முதலீடுகள் தொடங்கும். மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் வெற்றிகள் குவியும். தைரியம் ஏற்படும். நம்பிக்கை ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றம் பெறுவீர்கள். பெற்றோர் பெரியோரின் தேக ஆரோக்கியத்தில் ஏற்றம் உண்டாகும். கடல் கடந்து முதலீடுகள் ஏற்படும். கூட இருப்பவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். துர்க்கை கவசம் விடாமல் சொல்வதும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பட்டீஸ்வரம் கோவில் செல்வது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். துர்க்கை ஹோமத்திற்கு முடிந்த பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்.
குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் காப்பாற்றுவீர்கள். தொழிலில் வேற்று மொழி மனிதர்களால் தடங்கல்கள் வரலாம் என்பதால் கவனம் தேவை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



