STPM கல்வி அமைச்சின் கீழ் தொடரும்! தேவையில்லாமல் மாற்ற வேண்டாம்! அன்வார் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 28,
STPM எனும் ஆறாம் படிவம் உயர்கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்றும் அது கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் நிலைத்திருக்கும் என்றும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இன்று உறுதிப்படுத்தினார். ஆறாம் படிவம் PRA UNIVERSITY என குறிப்பிட்டாலும், டிப்ளோமா அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதால் அது உயர்கல்வி அமைச்சின் கீழ் நிலைநிறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

STPM பயிலும் 31,000 மாணவர்களுக்கு உதவி நிதி வழங்குவதற்குக் கல்வி அமைச்சின் நிதியைப் பயன்படுத்த அரசு முழு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இவ்வாண்டு RM4.69 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். STPM கல்விக்கான ஆசிரியர்கள், கற்றல் கற்பித்தல் முறைமைகள் அனைத்தும் இதுவரையில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வந்ததால், தேவையில்லாமல் அமைச்சை மாற்ற வேண்டாம் என Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *