ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் - ஓமனுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 29 May, 2026
வாஷிங்டன், மே 29-
உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தொடர்பான விவகாரத்தில் ஓமனுக்கு அமெரிக்க அதிபர் Donald Trump கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் மத்திய கிழக்கில் புதிய அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரான் மற்றும் ஓமன் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டண வசூல் செய்யும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஓமன் மற்ற நாடுகளைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார். சில சர்வதேச ஊடகங்கள், அவர் மிகவும் கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாகச் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க நிதித்துறை செயலாளர் Scott Bessent, ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டண வசூல் அமைப்பை உருவாக்க எந்த நாடும் முயற்சித்தால் பொருளாதார தடைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



