அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் – ஈரான் அறிவிப்

top-news
FREE WEBSITE AD

தெஹ்ரான், செப். 8 –

அமெரிக்கா தங்களை அச்சுறுத்துவதையும், தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைக்க தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி இதுகுறித்து கூறுகையில், “அமெரிக்கா ஈரானை அச்சுறுத்துவதையும் தாக்குவதையும் நிறுத்தினால், ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்தார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய தடை செய்யப்பட்ட கடல் மண்டலத்தை வரும் நாட்களில் அறிவிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க கடற்படை முற்றுகை தொடங்கும் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை இந்த புதிய மண்டலம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மண்டலத்துக்குள் ஈரானின் ஒருங்கிணைப்பு இல்லாமல் நுழையும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் ரெசாயி எச்சரித்தார். இதனால் அந்தக் கப்பல்களின் காப்பீடு மற்றும் எதிர்கால ஹார்முஸ் ஜலசந்தி பயணங்களும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *