விமானத்தில் திருட முயன்ற வெளிநட்டவர் கைது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, பிப் 8: சுபாங்கிலிருந்து பினாங்கு செல்லும் விமானத்தில் சக பயணியின் பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்படும் 52 வயது வெளிநாட்டவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

பினாங்கின் ஜார்ஜ் டவுனில் உள்ள பாராட் டயா மாவட்ட காவல்துறை இது தொடர்பாக இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது.  அடையாளம் தெரியாத ஒருவர் தங்கள் பயணப் பெட்டியை துழாவுவதைக் கண்டதும், உடனடியாக விமானக் குழுவினருக்கு பாதிக்கப்பட்ட நபர் தகவல் தெரிவித்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்தனர். பின்னர் பாயன் லெபாஸில் உள்ள பினாங்கு சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் போலீஸ் அறிக்கை பதிவு செய்யப்பட்டது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணையில் எந்த மதிப்புமிக்க பொருட்களும் காணாமல் போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், சந்தேக நபர் மேலும் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *