UPSI மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, பிப் 13: தஞ்சோங் மாலிம் பகுதியில் சுங்கை பெர்ணாம் ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, UPSI பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று  மாலை 6.57 மணியளவில் 23 வயதுடைய முகம்மது அஃபிக் ஐசாத் முக்த் ஷுக்ரி தொடர்பான சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக 
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாடுகள் உதவி இயக்குநர் சபரோஸி நோர் அக்மட்  தெரிவித்தார்.

அவர்கள் முதலில் இருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தூரத்தில் பலமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும்,  பாதிக்கப்பட்டவர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கொண்டதாகவும்,  மற்ற இருவர் ஆற்றின் அடர்ந்த நீரில்லாத பகுதிக்குத் தள்ளப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர், பொதுமக்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார். சம்பவ இடத்தில் மீட்பு பணியாளர்கள் அவசர உதவி வழங்கினர். ஆனால், சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்து உயிரிழந்ததாக அறிவித்தனர்.

உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *