மனைவியின் வாகனத்தைத் தீ வைத்து எரித்த கணவர்!

- Sangeetha K Loganathan
- 03 Feb, 2025
பிப்ரவரி 3,
சாலையில் ஆடவர் ஒருவர் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட 25 வயது ஆடவரைக் காவல்துறையின் தேடி வருவதாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். நேற்று இரவு 10 மணியளவில் ஜொகூரில் உள்ள Jalan Tebrau சாலையில் தனது 21 வயது மனைவியின் Toyota Vios ரக வாகனத்தை இடைமறித்து 25 வயது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் குடும்பப் பிரச்சனையின் காரணமாகத் தனது கணவர் இவ்வாறு செய்ததாக பாதிக்கப்பட்ட 21 வயது மனைவி புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட 25 வயது ஆடவரைத் தேடி வருவதாகவும் Raub Selamat தெரிவித்தார்.
Seorang lelaki berusia 25 tahun dicari polis selepas didakwa membakar kereta isterinya Toyota Vios di Jalan Tebrau, Johor. Kejadian dipercayai berpunca daripada konflik rumah tangga. Mangsa wanita berusia 21 tahun telah membuat laporan polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *