சமூக வலைத்தளங்கள் வலையில் சிக்கிய குழந்தைகளுக்கு SOSMA பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – SUHAKAM
- Surendran Sumdraraj
- 15 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 15-
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு தளங்கள் மூலம் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவாக ஈர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாதுகாப்பு குற்றச் சட்டம் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 – SOSMA பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மலேசிய மனித உரிமைகள் ஆணையமான SUHAKAM வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரங்களில் தொடர்புடைய குழந்தைகள் குற்றவாளிகளாக அல்லாது, சுரண்டலுக்குள்ளான பாதிக்கப்பட்டவர்களாக கருதப்பட வேண்டும் என்றும் SUHAKAM தெரிவித்துள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு உதவிகள் குழந்தைகள் சட்டம் 2001இன் கீழ் வழங்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
மேலும், SOSMA சட்டம் குழந்தைகள் மீது பயன்படுத்தப்படுவது மனித உரிமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கைகளுக்கு எதிரானது எனவும் SUHAKAM கூறியது. இதனையடுத்து, அந்தச் சட்டத்தை முற்றிலும் ரத்து செய்யவோ அல்லது திருத்தங்களுடன் மறுசீரமைக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டத்தின் பயன்பாட்டில் நீதித்துறை கண்காணிப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தெளிவான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



