தீ விபத்தில் பாதித்த மக்களை நேரில் சந்தித்தார் கிளந்தான் சுல்தான் முகமது V

top-news

கோத்தா பாரு, ஜூன் 11 –

கிளந்தான் மாநிலத்தின் கம்போங் கோக் காப்பூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கிளந்தான் சுல்தான் Sultan Muhammad V நேற்று இரவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மாநில இஸ்லாமிய மேம்பாடு, தஃவா, தகவல் மற்றும் வெளிநாட்டு உறவுகள் குழுத் தலைவர் முகமட் அஸ்ரி மாட் டாவுட் வெளியிட்ட அறிக்கையில், சுல்தானின் இந்த வருகை மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் கருணைமிக்க ஆட்சியாளரின் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சோதனைகளையும் துயரங்களையும் எதிர்கொண்டு வரும் மக்களுடன் நேரில் இருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய மாமன்னரின் வருகை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகப்பெரிய மன உறுதியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவ இடத்திற்கே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிந்ததுடன், அவர்களிடம் தனது ஆழ்ந்த இரக்கத்தையும் அனுதாபத்தையும் சுல்தான் முகம்மது V வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் குறித்து உரிய அதிகாரிகளிடமும் சுல்தான் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்கும் அவர் முக்கியத்துவம் அளித்ததாகக் கூறப்படுகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்