சுங்கைபூலோ ஆபத்தான தொகுதியா? அதைப்பற்றி எனக்கு கவலையில்லை! - ரமணன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 9: PKR ஐப் பொருத்த வரை சுங்கை பூலோ தொகுதி அதிக ஆபத்துள்ள தொகுதியாக PKR உள்துறை அறிக்கையில் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அதைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்று PKR உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான R. Ramanan தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதி ஆரஞ்சு, நீலம், மஞ்சள் அல்லது சிவப்பு எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. நான் சேவை செய்வதில்தான் கவனம் செலுத்துகிறேன் என்று அவர் கூறினார்.

சுங்கை பூலோ மக்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளும் சேவைகளும்தான் முக்கியம் என்றும், தனது பணியை மக்கள் மதிப்பீடு செய்வார்கள் என்றும் ரமணன் தெரிவித்தார்.

PKR உள்துறை ஆய்வில் சுங்கை பூலோ, கோம்பாக் உள்ளிட்ட தொகுதிகள் “Tier 3” அல்லது மீட்பு தேவைப்படும் ஆபத்தான தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அரசியல் கணிப்புகள் பலமுறை தவறாகியுள்ளன என்றும், இந்த ஆய்வு 1 லட்சத்து 80 ஆயிரம் மக்களின் கருத்தின் அடிப்படையில் செய்யப்படவில்லை என்றும் ரமணன் சாடினார்.

100 அல்லது 200 பேரிடம் மட்டும் கேட்டு, மீதியை ஊகமாக கூறியிருக்கலாம். அதனால் இதை தாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *