‘இது மன்னிக்க முடியாதது’ – ‘ஜனநாயகன்’ படக்காட்சிகள் கசிந்ததற்குச் சூர்யா கண்டனம்

top-news
FREE WEBSITE AD

 ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்கள் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சூர்யா, “ஒரு திரைப்படம் உருவாக பலரின் கடின உழைப்பு, நேரம் மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. இப்படத்தின் காட்சிகள் அனுமதியின்றி வெளியானது மன்னிக்க முடியாத செயல்” என்று தெரிவித்தார். மேலும், இது போன்ற செயல்கள் படைப்பாளிகளின் உழைப்பை அவமதிப்பதாகவும் அவர் கூறினார்.

‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கசிந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்வோருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட உலகில் சமீபகாலமாக படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிவது அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *