வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய சூர்யாவின் ‘கருப்பு’: ரூ.300 கோடியைக் கடந்த சாதனை
- Surendran Sumdraraj
- 01 Jun, 2026
சென்னை, ஜூன் 1-
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் ‘கருப்பு’ திரைப்படம் வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலகளவில் இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூர்யாவுடன் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா மற்றும் நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் ஓடி வருகிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாகவும், இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியான 10 நாட்களிலேயே ரூ.220 கோடிக்கும் மேல் வசூலித்த ‘கருப்பு’, பின்னர் தனது வசூல் வேகத்தை தக்கவைத்து தற்போது ரூ.300 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



