மகள், மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்த சூர்யா – ஜோதிகா

top-news
FREE WEBSITE AD

சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா, தங்களது 20-ஆவது திருமண நாளை முன்னிட்டு, மகள் தியா மற்றும் மகன் தேவ் முன்னிலையில் மீண்டும் திருமண உறுதிமொழியை புதுப்பித்துள்ளனர்.

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜோடியாக நடித்த சூர்யா – ஜோதிகா, பின்னர் ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் திருமண வாழ்க்கையின் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.

இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில், கடந்த செப்டம்பர் 11-ந்தேதி வெளிநாட்டில் கிறிஸ்தவ முறைப்படி திருமண உறுதிமொழியை மீண்டும் புதுப்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களது மகள், மகன் மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோவை சூர்யா – ஜோதிகா தம்பதி ‘தி சீக்குவல்’ என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *