வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவர் கைது!

top-news

ஏப்ரல் 9,

சாலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி ஆடவர் ஒருவர் வழிப்பறி செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் மீது முன்னமே 15 போலிஸ் புகார்கள் இருப்பதாகவும் தேடப்படும் குற்றவாளிகளில் அவரும் ஒருவர் என்றும் Tan Seng Lee தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட ஆடவர் ஒரே நாளில் 2 வெவ்வேறு சாலைகளில் வழிப்பறியில் ஈடுப்பட்டிருந்ததாகவும் காலை 8.26 மணியளவில் கூலாய் Jalan Seri Putra சாலையில் உள்ள ஓர் இந்தோனேசிய பெண்ணிடம் கொள்ளையிட்டதாகவும் இந்தோனேசிய பெண் கத்திக்குத்துக்குள்ளானதாகவும் மீண்டும் 8.45 மணிக்கு Taman Impian Senai சாலையில் மற்றொரு வழிப்பறியில் ஈடுபட்டதும் காவல்துறையினர் கூலாய் முழுவதும் தேடி 2 மணிநேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவரைக் கைது செய்ததாக Tan Seng Lee தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர் 40 வயது ஆடவர் என்றும் சோதனையில் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டதாகவும் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.

Seorang lelaki tempatan berusia 40 tahun yang terbabit dalam dua kes samun jalanan di Kulai telah ditahan polis. Suspek yang mempunyai 15 rekod jenayah lampau itu turut didapati positif dadah jenis methamphetamine dan disyaki menikam seorang wanita Indonesia dalam satu kejadian samun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *