சட்டவிரோத மின்னணுக் கழிவு இறக்குமதி: வெளிநாட்டவர்களின் நிறுவனங்கள் பிரதான சதி
- Tamil Malar (Reporter)
- 21 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 21-
மின்னணுக் கழிவு (e-waste), பிளாஸ்டிக், காகிதக் கழிவுகளை சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் இறக்குமதி செய்து, மறுசுழற்சி செய்வதற்காக செயல்படுத்தும் பின்னணியில் வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நிறுவனங்கள் பிரதான சதியாக செயல்படுகின்றன என சந்தேகிக்கப்படுகிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மேற்கொண்ட சமீபத்திய உளவுத் தகவல் திரட்டலின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் மின்னணுக் கழிவுகள் காரணமாக தொடர்ந்து ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான வழக்குகளில், முக்கிய சூத்திரதாரர்களையும், அவர்களுடன் இணைந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில அதிகாரிகளையும் SPRM தீவிரமாக தேடி வருகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறைந்தது 2,000 முதல் 3,000 வரையிலான கண்டெய்னர்களில் மின்னணுக் கழிவுகள் அடங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாட்டின் முக்கிய துறைமுகங்கள் வழியாகக் கடத்தப்பட்டதாக SPRM தெரிவித்துள்ளது. இந்தக் கழிவுகள் முறையான அனுமதி இன்றி கொண்டு வரப்பட்டு, உள்நாட்டில் மறுசுழற்சி செய்யப்படுவதால், மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயம் ஏற்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



