தனியார் கடன் நிறுவனங்கள் பள்ளிகளிலிருந்து விலகி இருங்கள்! - கல்வி அமைச்சர்!

top-news

பிப்ரவரி 8,


பள்ளிகளில் தனியார் கடன் நிறுவனங்கள் நிதி ஆலோசனை வழங்குவதற்குக் கல்வி அமைச்சு எந்தவோர் ஒப்புதலும் வழங்கவில்லை என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். அரசு அதிகாரிகளுக்குத் தனியார் நிறுவனங்கள் நிதி ஆலோசனைகளை வழங்கும் எண்ணம் இருந்தால் அதைப் பள்ளிகளில் நடத்த வேண்டாம் என்றும் லாப நோக்கம் கொண்ட தனியார் நிறுவனங்கள் பள்ளிகளிலிருந்து விலகி இருங்கள் என்றும் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.

கல்விக் கழகங்களைச் சார்ந் அரசு ஊழியர்களுக்கானக் கடன் மேலாண்மை திட்டங்கள் குறித்து தனியார் நிறுவனங்கள் ஆலோசனைகள் வழங்கி வருவதாக வெளிவந்திருப்பது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் MAZLEE MALIK கேள்வி எழுப்பிய நிலையில் கல்விக் கழகங்களில் தனிப்பட்ட முயற்சியில் தனியார் நிறுவனங்கள் இம்மாதிரியான ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம் என்றும், கல்வி அமைச்சும் மாநிலக் கல்வி இலாகாவும் இது தொடர்பாக எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் ஓப்பந்தமோ ஒப்புதலோ வழங்கவில்லை என்று Fadhlina Sidek விளக்கமளித்தார்.

Kementerian Pendidikan (KPM) tidak pernah membenarkan syarikat swasta menawarkan pinjaman kepada guru di sekolah. Menteri Pendidikan Fadhlina Sidek menyatakan siasatan sedang dijalankan dan kemungkinan syarikat mendapat kebenaran individu bukan secara rasmi daripada KPM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *