தாய்லாந்து ஓபன்: 2-ஆவது சுற்றுக்கு முன்னேறிய கோ சே பெய் – நூர் இஸ்ஸுடின் ஜோடி

top-news
FREE WEBSITE AD

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மலேசியாவின் ஆண்கள் இரட்டையர் ஜோடியான Goh Sze Fei – Nur Izzuddin Rumsani இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பாங்காக்கில் உள்ள நிமிபுட்ர் அரங்கில் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், மலேசிய ஜோடி ஜப்பானின் Hiroki Okamura – Kyohei Yamashita இணையைக் கடுமையாகப் போராடி வீழ்த்தியது.

56 நிமிடங்கள் நீண்ட இந்த ஆட்டத்தில், சே பெய் – நூர் இஸ்ஸுடின் ஜோடி 21-15, 17-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய மலேசிய ஜோடி, இரண்டாவது செட்டில் சற்றே தடுமாறியது. இதனால் ஜப்பான் ஜோடி வாய்ப்பைப் பயன்படுத்தி போட்டியை முடிவுச் செட்டுக்குக் கொண்டு சென்றது.

மூன்றாவது செட்டில் இரு அணிகளும் கடுமையாக போராடின. புள்ளிகள் மாறி மாறி சென்ற நிலையில், இடைவேளையின் போது மலேசிய ஜோடி 11-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின்னர் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய சே பெய் – நூர் இஸ்ஸுடின் தொடர்ந்து புள்ளிகள் குவித்து வெற்றியை உறுதி செய்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *