இந்தோனேசியா ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய கோ சே ஃபெய் – நூர் இஸ்ஸுடின்
- Surendran Sumdraraj
- 06 Jun, 2026
ஜகார்த்தா, ஜூன் 6 –
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் மலேசியாவின் ஆடவர் இரட்டையர் ஜோடியான கோ சே ஃபெய் – நூர் இஸ்ஸுடின் ரும்சானி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளனர்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் – எம்.ஆர். அர்ஜுன் ஜோடியை எதிர்கொண்ட உலக தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள மலேசிய ஜோடி, வெறும் 32 நிமிடங்களில் 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரை முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய கோ சே ஃபெய் – நூர் இஸ்ஸுடின் ஜோடி, இந்திய அணிக்கு எந்தவித வாய்ப்பும் வழங்காமல் வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம் கடந்த மாதம் மலேசியா மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்ததுடன், சிங்கப்பூர் ஓபனில் காலிறுதிவரை முன்னேறியிருந்த இவர்களின் சிறப்பான ஆட்டம் தொடர்கிறது.
மேலும், இந்தோனேசியா ஓபனில் மலேசியாவின் மற்ற அனைத்து வீரர்களும் முன்னதாகவே வெளியேறிய நிலையில், தற்போது கோ சே ஃபெய் – நூர் இஸ்ஸுடின் ஜோடி மட்டுமே நாட்டின் கடைசி நம்பிக்கையாக உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



