தாபோங் ஹாஜி விவகாரம்: பெர்சாத்து எம்.பி.க்கள் மக்களவை சிறப்புக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 11-

தாபோங் ஹாஜி (TH) தொடர்பான அரச ஆணைய விசாரணை அறிக்கையை (RCI) விவாதிப்பதற்காக இன்று நடைபெறும் மக்களவையின் சிறப்புக் கூட்டத்தில் அனைத்து பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பங்கேற்பார்கள் என புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த விவகாரம் பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் சிறப்புக் கூட்டத்தில் இருந்து வெளியேறப் போவதில்லை என அவர் கூறினார்.

“பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் கூட்டத்திலிருந்து வெளியேற மாட்டோம். இது மக்களுக்கு முக்கியமான பிரச்சினை. இதில் அரசியல் நாடகம் தேவையில்லை,” என்று அவர் இன்று வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தாபோங் ஹாஜி தொடர்பான விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறாமல், அதன் உண்மை நிலை பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என ராட்ஸி குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *