3 ஆவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு! – தமிழ் அறவாரியம்

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 26.

மலேசியாவில் தமிழ்க்கல்வி சீராக இருக்க தற்காலத்திற்கு ஏற்ப தமிழ்க்கல்வியில் பல்வேறு புத்தாக்கங்களும் சிறப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதை முன்னிருத்தி மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருகிறது.

எதிர்வரும் டிசம்பர் 21 Asia Pacific University Kuala Lumpur பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருப்பதாகத் தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவரும் மாநாட்டின் தலைவரும் மலாயாப் பல்கலைக்கழக மொழி மொழியியல் புலத்தின் விரிவுரையாளருமான முனைவர்.இரா.செல்வஜோதி தெரிவித்தார்.

இம்மாநாட்டின் நோக்கம்!

1.     மலேசியத் தமிழ்க் கல்வியில் ஏற்படும் முக்கியமானச் சவால்களையும் வாய்ப்புகளையும்  கண்டறிதல்.
2.     தமிழ்க்கல்வியின் தர மேம்பாட்டிற்கானப் புதிய அணுகுமுறைகளை ஆராய்தல்.
3.     தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையையும் அதைத் தக்கவைப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிதல்.
4.     எஸ்.பி.எம் தேர்வுத் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடமும் எஸ்.தி.பி.எம் தேர்வுத் தமிழ்ப்பாடமும் போதிப்பதில் ஏற்படும் சிக்கல்களுக்கானத் தீர்வுகளை அடையாளம் கண்டு முன்மொழிதல்.
5.     இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியப் பாடத்தை ஊக்குவித்தல்.

மாநாட்டில் நீங்களும் பங்கேற்க பதிவுக்கு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkO6JuoGT2WEQHXDIMAueR4Oigot3UcVZcsqMKRM8NrJdiCw/viewform

மேல் விவரங்களுக்கு: குமாரி ரினிஷா (016 4180165)

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *