தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் – கூட்டணி கட்சிக்கும் இலாகா மாறுகிறது

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 8 –

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சருக்கும் இலாகா மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 17-ஆவது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் இடம்பெற்றனர். இதில் காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

ஆட்சி பொறுப்பேற்று சுமார் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விஜயின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளனர்.

அமைச்சர்கள் துறை சார்ந்த பணிகள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகள், சொந்த தொகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டசபை செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *