பிரதமர் அன்வாரின் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

  மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் திருவள்ளுவராண்டுத் தமிழ்ப்புத்தாண்டையும் பொங்கலையும் வரவேற்போம் என வாழ்த்து வெளியிட்டுள்ளார். தேசிய மொழியிலும் தமிழ் மொழியிலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் திருவள்ளுவராண்டை முன்னிருத்தும் தை மாதத்தின் முதல் நாளானதைப் பொங்கலாகக் கொண்டாடும் தமிழ்ச்சமூகத்திற்கு  மலேசிய அரசாங்கத்தின் வாழ்த்தைத் தெரிவிப்பதாகவும் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் முன்னிருத்தி பண்டிகைகளைக் கொண்டாடும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் அன்வாரின் வாழ்த்துச் செய்தி :-

Masyarakat Tamil akan merayakan perayaan Ponggal yang bakal diraikan selama empat hari bermula hari ini sebagai tanda syukur. Menurut kalendar Tahun Tamil (Tahun Thiruvalluvar), perayaan Ponggal adalah permulaan bulan Thai yakni hari pertama Ponggal. 

Justeru, saya mengharapkan perayaan Ponggal pada tahun ini disambut dengan lebih meriah dan lebih bermakna di samping keluarga dan yang tersayang. Di pihak Kerajaan, kami akan terus bekerja dengan gigih agar tidak ada kumpulan dan kelompok masyarakat yang dipinggirkan, terutamanya kaum India. Kemiskinan di kalangan kaum India akan terus menjadi keutamaan Kerajaan. Lantas, kebersamaan dan perpaduan mesti terus diperkukuh sebagai jalan ampuh menjelmakan perubahan dan keamanan buat negara.

Mewakili keluarga besar Malaysia, saya mengucapkan Selamat Tahun Baru Tamil dan selamat menyambut Perayaan Ponggal kepada seluruh masyarakat India terutamanya komuniti Tamil.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக இன்று தொடங்கி நான்கு நாள்களுக்குத் தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாடவிருக்கின்றனர். தமிழ் நாள்காட்டியின்படி (திருவள்ளுவர் ஆண்டு) தை மாதத்தின் தொடக்கமாக இந்தப் பொங்கல் விழா வரவேற்கப்படுகின்றது.

எனவே, இந்த ஆண்டு பொங்கல் விழாவைக் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் அனைவரும் கொண்டாட வேண்டும். அரசாங்கத்தின் தரப்பில், குறிப்பாக இந்தியர்கள் உட்பட எந்தவொரு சமூகத்தினரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைப்போம். இந்தியர்களிடையே நிலவும் வறுமை அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும். அதனடிப்படையில், நாட்டில் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என நான் பெரிதும் நம்புகிறேன்.

மலேசியக் குடும்பத்தின் சார்பாக, குறிப்பாக, தமிழ் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டினையும், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்வார் இப்ராகிம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *