விஜயின் வேட்புமனு நிராகரிப்பா? வேட்புமனுவில் முரண்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 4,

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி போட்டியிடும் திரைப்பட நடிகர் விஜய் இரு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் விஜயின் வேட்புமனுவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருப்பதால் வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சென்னையின் பெரம்பூர் சட்டமன்றத்திலும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலும் கடந்த 30 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஜய் தாக்கல் செய்த இரு வெவ்வேறு வேட்புமனுவிலும் வெவ்வேறு தகவல்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவருடைய வயது 52 என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனிவில் 51 என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தன் மீது எந்தவொரு காவல்துறை வழக்குகளும் இல்லை என விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டில் தனது பாதுகாவலர்கள் தாக்கப்பட்டதாக விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அது குறித்து இதுவரையும் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதாகவும் தெரிய வந்துள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *