இந்துமதச் சின்னம் அவமதிப்பு வழக்கு – தமீம் தாஹ்ரி மக்காவில் இருப்பதாகத் தகவல்
- Surendran Sumdraraj
- 19 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 19-
இந்துமதத்தின் புனிதச் சின்னத்தைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான தமீம் தாஹ்ரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் தெரிவித்ததாவது, குறித்த நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் முதலில் தாய்லாந்துக்கு சென்றதாகவும், தற்போது சவுதி அரேபியாவில் இருக்கக்கூடும் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
“எங்கள் அறிக்கைகளின் படி, அவர் தாய்லாந்துக்கு சென்றுள்ளார். மேலும், அவர் புனித நிலமான மக்காவில் இருக்கலாம் என்ற தகவலும் உள்ளது,” என்று அவர் இன்று புக்கிட் அமான் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தொடர்ந்து, குறித்த நபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சரியான நேரத்தில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



