TAMIM DAHRI எப்படி மலேசியாவுக்குள் நுழைந்தான்? டி. ஏ. பி GANABATHIRAU கேள்வி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 22,

 இந்து கோயிலில் வைக்கப்பட்டிருந்த திருசூலத்தைக் காலால் மிதித்து சேதப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த TAMIM DAHRI, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் காவல் துறை தெரிவித்திருந்த நிலையில் இப்போது அவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அப்படியானால் அவர் எப்படி மலேசியாவுக்குள் மீண்டும் நுழைந்தார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் GANABATHIRAU கேள்வி எழுப்பினார். 

Tamim Dahri வெளிநாட்டில் இருக்கும் போதே அவருடைய PASSPORT முடக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. உள்துறை அமைச்சர் DATUK SERI SAIFUDDIN NASUTION INTERPOL உதவியுடன் TAMIM DAHRI-ஐ தேடி வருவதாக தெரிவித்தார். ஆனால் குடிநுழைவுத் துறைக்கு தெரியாமல் மலேசிய எல்லைக்குள் tamim Dahri எப்படி நுழைந்தார் என GANABATHIRAU கேள்வி எழுப்பினார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எல்லைகள் முறையாக சோதிக்கப்பட வேண்டும் என GANABATHIRAU வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *