காவல்துறைக்குப் பயந்து தாய்லாந்துக்குத் தப்பி ஓடிய ZAMRI VINOTH, TAMIM DAHRI!
- THINAGAREN SANGGAREN
- 14 Mar, 2026
மார்ச் 14,
சர்ச்சைக்குரிய சமய போதகரான ZAMRI VINOTH, இந்து மதச் சின்னமான திரிசூலத்தை அவமதித்த TAMIM DAHRI ஆகிய இருவரும் காவல்துறையின் கைதுக்கு பயந்து தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றிருப்பதாகத் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail தெரிவித்தார். அவர்கள் இருவரையும் தாய்லாந்து காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகவும் விரைவில் அவர்களைக் கைது செய்து மலேசியாவுக்குக் கொண்டு வரவிருப்பதாகவும் Datuk Seri Mohd Khalid Ismail உறுதியளித்தார்.
தொடர்ந்து கோயில்களுக்கு எதிராகவும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்படும் ZAMRI VINOTH தற்போது மலேசியாவில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அல்லது தனியார் நிலங்களில் இருக்கும் கோயில்களை இடிப்பதற்காகப் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி எந்திரத்தை வாங்கிய TAMIM DAHRI எனும் ஆடவரையும் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது என Datuk Seri Mohd Khalid Ismail தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 7 தலைநகரில் கோயில்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியை ஒருங்கிணைத்த குற்றத்திற்காகச் சட்டப்பிரிவு 505 B-யின் கீழும், இந்து சமயத்தைத் தொடர்ந்து அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதற்காக 1948 தேசத் துரோகச் சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ZAMRI VINOTH கைது செய்யப்படவுள்ளார் என தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail தெரிவித்தார்.
லங்காவியில் உள்ள ஒரு கோயிலின் நுழைவாசலில் வைக்கப்பட்டிருந்த இந்து மதச் சமயச் சின்னமான திரிசூலத்தை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சேதப்படுத்திய TAMIM DAHRI எனும் ஆடவரைத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-இன் கீழ் கைத செய்யவிருப்பதாகவும் தேசிய காவல்துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



