ஜொகூர் தேர்தலில் உள்ளூர் முகங்களுக்கு முன்னுரிமை; அதிக தொகுதிகளில் பெர்சத்து போட்டி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 25 –

ஜொகூர் 16-ஆவது மாநிலத் தேர்தலில் (PRN16) பெர்சத்து கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடவுள்ளதுடன், ஜொகூரைச் சேர்ந்த உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தக்கூடிய வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்மாட் பைசால் அசுமு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெர்சத்து சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்கள் புதிய முகங்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கலவையாக இருப்பார்கள் என்றார்.

எனினும், பெர்சத்து எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை வெளியிட அவர் மறுத்தார். அந்த விவரத்தை கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகைதின் யாசின் இன்று பாகோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *