காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி – தேசிய கலப்பு இரட்டையர் வெளியேற்றம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 10-

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் (BAC) தொடரில் மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடி Chen Tang JieToh Ee Wei காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர்.

சீனாவின் நிங்போவில் நடைபெற்ற இந்த போட்டியில், உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள இந்த ஜோடி, உலக தரவரிசை 147-ஆவது இடத்தில் உள்ள தென் கொரிய ஜோடி Kim Jae HyeonJang Ha Jeong க்கு எதிராக அதிர்ச்சி தோல்வி கண்டது.

தாங் ஜீ–ஈ வேய், 2025 உலக சாம்பியன்களாக இருந்த போதிலும், இந்தப் போட்டியில் தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினர். குறிப்பாக, ஆட்டத்தின் வேகம் மற்றும் கட்டுப்பாட்டில் பின்தங்கியதால், எதிரணியிடம் முன்னிலை கொடுத்தனர்.

போட்டியின் தொடக்கமே உறுதியற்றதாக இருந்ததால், முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஆட்டத்தில் மீள முடியாமல், காலிறுதியில் அவர்கள் பயணம் முடிவுக்கு வந்தது.

இந்த தோல்வி, மலேசிய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *