நேருக்கு நேர் மோதிய கார்கள்! இளைஞர் பலி! அறுவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

மே 28,

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று அதிகாலை 2.39 மணிக்குத் தாப்பா சாலையில் SAGA FLX வாகனமும் செவர்லேட் வாகனமும் விபத்துக்குள்ளானதாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI தெரிவித்தார். விபத்து ஏற்பட்டது தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாப்பாவிலிருந்து TASEK TEMOH சாலையில் ஏற்பட்ட விபத்தில் SAGA FLX வாகனத்தில் பயணித்த 29 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், அவருடன் பயணித்த 40 வயது ஆடவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI தெரிவித்தார். Chevrolate வாகனத்திலிருந்த 19 முதல் 66 வயதுக்குட்பட்ட இரு ஆண்களும் இரு பெண்களும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் SABARODZI தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *