ஆசியான் நட்சத்திர கால்பந்து நட்புமுறை ஆட்டம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 28-

ஆசியான் நட்சத்திர நட்புமுறை கால்பந்தாட்டத்தில் பங்கேற்பதற்காக மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் விளையாட்டாளர்கள் நேற்று கோலாலம்பூர் வந்தடைந்தனர். இன்று புக்கிட் ஜாலில் கால்பந்து அரங்கில் நடைபெறவிருக்கும் நட்புமுறை ஆட்டத்தில் மலேசியா மென்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதவுள்ளது.

ரூபன் அமொரின் தலைமையிலான ரெட் டெவில்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள 32 ஆட்டக்காரர்களை உள்நாட்டு கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.எண்ட்ரி ஒனானா, ஜோன்னி இவான்ஸ், ஹெரி மகுயிரி, லுக் ஷோ, கெஸ்மிரோ, புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.2009ஆம் ஆண்டு புக்கிட் ஜாலில் கால்பந்து அரங்கில் நடைபெற்ற இரு நட்புமுறை ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட், மலேசியாவை 3-2, 2-0 என்ற கோல்களில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2024ஆம் ஆண்டு பருவத்திற்கான இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஆஸ்டன் வில்லாவை 2-0 என்ற கோல்களில் வீழ்த்திய மென் யு. நேற்று மாலை மணி 6.30-க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் கிளப் பிரபலங்கள், ஆசியான் நட்சத்திர கால்பந்து குழுவினரைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உற்சாகத்துடன் வரவேற்று சிறிது நேரம் உரையாடினார்.

அந்த சந்திப்பில், இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, ஆசியான் நட்சத்திர கால்பந்து குழுவின் பயிற்றுநர் கிம் சங் சிக் என பலரும் கலந்து கொண்டனர்.

Pasukan bola sepak Manchester United tiba di Kuala Lumpur untuk perlawanan persahabatan ASEAN Stars hari ini di Stadium Bukit Jalil. 32 pemain termasuk Ruben Amorin dan Luke Shaw disambut meriah. Perdana Menteri Anwar Ibrahim turut hadir menyambut mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *