அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறித்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் – அப்துல் ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

மாராங், செப். 18-

 2014-ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் (BN) அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததாக தாம் கூறிய கருத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க தயாராக இருப்பதாக பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தம்மிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகக் கூறிய அவர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இதுவரை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.

“வழக்குத் தொடர்வது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை சட்டத்துறை தலைவர் அலுவலகமே தீர்மானிக்க வேண்டும். நீதிமன்றத்திற்குச் சென்றால் நான் கூறியதை நிரூபிப்பேன்,” என அவர் தெரிவித்தார்.

மாராங்கில் உள்ள ருசிலா பள்ளிவாசலில் துஹா சமய உரையை முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அப்துல் ஹாடி இதனை கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *