பாரதிராஜா நடித்த கடைசி படமான ‘புலவர்’ – டீசர் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 8 –

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா கடைசியாக நடித்த ‘புலவர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவின் இறுதி திரைத்தோற்றத்தை மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

கிராமத்து மணம் கமழும் கதைகள் மற்றும் எதார்த்தமான மனிதர்களைத் திரையில் உயிர்ப்பித்தவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. இயக்குநராக மட்டுமின்றி, பல திரைப்படங்களில் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்தார்.

பல வெற்றிப் படங்களை வழங்கிய பாரதிராஜா, இந்த ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது.

இந்நிலையில், அவர் கடைசியாக நடித்த ‘புலவர்’ திரைப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

முருகையா இயக்கியுள்ள இப்படத்தில் பாரதிராஜாவுடன் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *