ருக்குன் நெகாராவை கேலி செய்ததாகக் கூறப்படும் நாடக வீடியோ: 3 நடிகர்கள் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 22-

 ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்பாடுகளைக் கேலி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலான நாடக வீடியோ தொடர்பாக, அதில் நடித்த ஐந்து பேரில் மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறுகையில், கைது செய்யப்பட்ட மூவரும் மலேசியர்கள் என்றும், அவர்களில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர் என்றும் தெரிவித்தார். அவர்கள் சிலாங்கூர் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.

வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களது கைப்பேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் மூவரும் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அந்தச் சாதனங்களில் சர்ச்சைக்குரிய நாடக நிகழ்ச்சி தொடர்பான உள்ளடக்கங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அடையாளம் காணப்பட்ட ஐந்து நடிகர்களில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் குடிவரவு பதிவுகளின்படி தற்போது பிரிட்டனில் இருப்பதாக நம்பப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *